பொருளாதார ஆய்வறிக்கையானது ஜூலை 04 அன்று மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த ஆய்வறிக்கையானது தலைமைப் பொருளாதார ஆலோசகரான கிருஷ்ணமூர்த்தி V சுப்பிரமணியனால் தயாரிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின்படி, இந்தியாவானது, காற்றாலை மின் உற்பத்தியில் 4வது இடத்திலும் சூரிய மின்னாற்றல் உற்பத்தியில் 5ஆம் இடத்திலும் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் 5-வது இடத்திலும் உள்ளது.
முக்கிய குறிக்கோள்கள்
2024-25 ஆம் ஆண்டு வாக்கில் 5 டிரில்லியன் டாலர்கள் என்ற பொருளாதார மதிப்பை அடைய நீடித்த அளவில் 8.1 % என்ற விகிதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உண்மையான வளர்ச்சி விகிதம் தேவைப்படுகின்றது.
இது பின்வரும் இலக்குகளைத் திட்டமிட்டிருக்கின்றது
“பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ” என்பதிலிருந்து பத்லாவ் (BADLAV-Beti Aapki Dhan Lakshmi Aur Vijay Lakshmi - பெண் குழந்தை உங்களின் தனலெட்சுமி மற்றும் விஜயலட்சுமி) என்ற திட்டத்திற்கு மாறுதல்.
தூய்மை பாரதத்திலிருந்து அழகு பாரதத்திற்கு மாறுதல்
சமையல் எரிவாய்வு மானியத்திற்கான “விட்டுக் கொடுங்கள்” எனும் கொள்கையிலிருந்து “மானியத்தைக் குறித்து சிந்தியுங்கள்” எனும் கொள்கைக்கு மாறுதல்.