TNPSC Thervupettagam

பொருளாதார நிலைத்தன்மை நிதி

March 17 , 2026 13 hrs 0 min 22 0
  • 2025-26 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கூடுதல் மானியக் கோரிக்கைகளுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • மத்திய நிதி அமைச்சர் ₹1 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார நிலைத்தன்மை நிதியை (ESF) முன்மொழிந்துள்ளார்.
  • உலகளாவிய நெருக்கடிகள், திடீர் பொருளாதார அதிர்ச்சிகள் மற்றும் விநியோகச் சங்கிலி இடையூறுகளுக்கு இந்தியா விரைந்து பதிலளிக்க இந்த நிதி உதவும்.
  • ஒரு நிதியாண்டிற்கு நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்ஜெட் ஒரு குறிப்பிட்ட சேவைக்குப் போதுமானதாக இல்லாதபோது 'கூடுதல் மானியக் கோரிக்கைகள்' அவசியமாகின்றன.
  • குடியரசுத் தலைவர் இந்த கோரிக்கைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிப்பார் என்பதோடு இவை இந்த நிதியாண்டு முடிவதற்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.
  • இந்திய அரசியலமைப்பின் 115-வது சரத்தின் கீழ் கூடுதல் மானியக் கோரிக்கைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்