பொருளாதார நீதியாக நலிவுற்றோர்க்கு பொதுப் பிரிவில் 10% இட ஒதுக்கீடு
January 8 , 2019 2332 days 690 0
பொதுப் பிரிவில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்பின் சரத்து 15 மற்றும் 16ல் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
இந்த இட ஒதுக்கீடானது 8 லட்சத்திற்கும் குறைந்த வருட வருமானத்தினையும் 5 ஏக்கர் வரையிலான நிலத்தினையும் உடையோர்க்கு கிடைக்கப் பெறும்.
ஏற்கனவே உள்ள 50% இடஒதுக்கீட்டிற்கு மேல் கூடுதலாக இந்த 10 % இட ஒதுக்கீடானது இருக்கும்.