பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு
June 4 , 2021 1524 days 594 0
கல்வி சேர்க்கை மற்றும் அரசு வேலைகளில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மகாராஷ்டிராவின் ஒரு சட்டத்தினை அரசியலமைப்பிற்குப் புறம்பானது எனக் கூறி உச்சநீதிமன்றம் அதற்குத் தடை விதித்தது.
பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் மராத்தா சமூகத்தினர் தற்போது பயன் பெறலாம் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
இதற்கு முன்பாக, மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா இட ஒதுக்கீடு இருந்ததனால் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினராக (SEBC - Socially and Economically Backward Class) அங்கீகரிக்கப்பட்டு இருந்த மராத்தா சமூகத்தினர் பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டின் பயனைப் பெற இயலாத நிலை இருந்தது.