பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு
September 8 , 2021 1469 days 574 0
உச்சநீதிமன்றத்தின் உடனடி ஒப்புதலைப் பெறாமல் அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டில் சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டினை வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி P.D. ஆதிகேசவலு ஆகியோர் மத்திய அரசின் ஜூலை 29 அறிவிப்பானது பின்வருவனவற்றிற்கு மட்டுமே அனுமதிக்கப்படத் தக்கதாகும் என தீர்ப்பளித்தனர்,
பட்டியலின சாதிப் பிரிவினருக்கு 15% இடஒதுக்கீடு
பட்டியலின பழங்குடியினருக்கு 7.5% இடஒதுக்கீடு
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு