- 15வது நிதி ஆணையத்தின் தலைவர் N.K. சிங் பொருளாதார வளர்ச்சிக் கழக நிறுவனத்தின் (Institute of Economic Growth Society – IEG) புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
- 1992 ஆம் ஆண்டு முதல் IEG நிறுவனத்தின் தலைவராக இருந்து வந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களையடுத்து இவர் இந்தப் பதவியை ஏற்று உள்ளார்.
பொருளாதார வளர்ச்சிக் கழகம்
- இது மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் தன்னாட்சி கொண்ட ஒரு பல்துறை மையமாகும்.
- 1952 ஆம் ஆண்டில் VKRV ராவ் என்பவரால் நிறுவப்பட்ட இக்கழகமானது 1958 ஆம் ஆண்டில் தான் செயல்படத் தொடங்கியது.
- இது புதுடெல்லியிலுள்ள டெல்லி பல்கலைக்கழகத்தின் வளாகத்தினுள் அமைந்து உள்ளது.
