பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு
January 16 , 2019 2312 days 738 0
பாராளுமன்றத்தில் 10 சதவிகித இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்ட சில நாட்கள் கழித்து, குஜராத் மாநில அரசு, தனது மாநில அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வியில் 2019 ஆம் அண்டு ஜனவரி 14-ம் தேதி முதல் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்காக திருத்திய இடஒதுக்கீட்டுச் சட்டத்தை அமல்படுத்தியிருக்கின்றது.
இதன்மூலம் புதிய விதிகளை செயல்படுத்தும் நாட்டின் முதலாவது மாநிலமாக குஜராத் உருவெடுத்துள்ளது.
குஜராத்தையடுத்து, நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் இரண்டாவது மாநிலமாக தெலுங்கானா இருக்கின்றது.