இத்தினமானது, இந்தியாவின் சிறந்தப் பொறியாளர்களில் ஒருவரான சர் மோக்ச குண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.
1912 ஆம் ஆண்டில், மைசூரின் 19வது திவானாக நியமிக்கப்பட்ட அவர், "நவீன மைசூரின் கட்டமைப்பாளர்" என்ற பட்டத்தைப் பெற்றார்.
அவர் ஒஸ்மான் சாகர் மற்றும் ஹிமாயத் சாகர் போன்ற நீர்த் தேக்கங்களை வடிவமைத்து முறையான வெள்ளக் கட்டுப்பாட்டு தீர்வுகளை முன்மொழிந்தார்.
1932 ஆம் ஆண்டில் கிருஷ்ண இராஜ சாகரா (KRS) அணையைக் கட்டிய அவர், ஆசியாவின் மிகப்பெரிய நீர்த்தேக்கத்தை உருவாக்கி மாண்டியா என்ற பகுதியின் வேளாண்மையினை மாற்றியமைத்தார்.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "Deep Tech & Engineering Excellence: Driving India’s Techade" என்பதாகும்.