TNPSC Thervupettagam

பொறுப்புள்ள நாடுகளின் குறியீடு 2026

January 21 , 2026 10 hrs 0 min 24 0
  • உலக அறிவுசார் அறக்கட்டளை (WIF) பொறுப்புள்ள நாடுகளின் குறியீட்டை (RNI) வெளியிட உள்ளது.
  • உலக நாடுகளை மதிப்பிடுவதற்கான இந்தியாவின் முதல் உலகளாவிய குறியீடு இதுவாகும்.
  • RNI பொருளாதார அல்லது இராணுவ சக்திக்குப் பதிலாக பொறுப்பான நிர்வாகம், நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய பொறுப்பை மதிப்பிடுகிறது.
  • இது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), மும்பையில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் (IIM) மற்றும் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் குறியீடு 154 நாடுகளை வெளிப்படையான மற்றும் உலகளவில் பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி மதிப்பிட்டது.
  • RNI உள் நாட்டுப் பொறுப்பு (குடிமக்கள் நல்வாழ்வு, கண்ணியம், நீதி), சுற்றுச்சூழல் பொறுப்பு (பருவநிலை நடவடிக்கை, இயற்கை வள மேலாண்மை) மற்றும் வெளிப்புறப் பொறுப்பு (அமைதி, பலதரப்பு ஒத்துழைப்பு, உலகளாவிய நிலைத்தன்மை) ஆகிய மூன்று பரிமாணங்களைக் கொண்டுள்ளது.
  • நெறிமுறை நிர்வாகம் மற்றும் நிலையான மேம்பாடு குறித்து நாடுகளை மதிப்பிடச் செய்வதற்கான மதிப்பு அடிப்படையிலான கட்டமைப்பை இது வழங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்