குடிமக்கள், சுற்றுச்சூழல் மற்றும் உலகளாவிய சமூகத்திற்கு உலக நாடுகள் எவ்வாறு பொறுப்புடன் செயல்படுகின்றன என்பதை மதிப்பிடுவதற்காக பொறுப்புள்ள நாடுகளின் குறியீடு (RNI) 2026 வெளியிடப்பட்டது.
உலக அறிவுசார் அறக்கட்டளையின் (WIF) உதவியுடன் இந்தக் குறியீட்டை முன்னாள் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் புது டெல்லியில் அதிகாரப் பூர்வமாக வெளியிட்டார்.
இந்தக் குறியீட்டில் இடம் பெற்ற 154 நாடுகளில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்தது.
அமெரிக்கா மற்றும் சீனாவை விட முன்னிலையில் இந்தியா 16வது இடத்தைப் பிடித்தது.
இந்தக் குறியீடு வழக்கமான அதிகார நடவடிக்கைகளிலிருந்து நெறிமுறை நிர்வாகம் மற்றும் பொறுப்பு மீது கவனம் செலுத்துகிறது.