பொலிவுரு நகரங்கள் திட்டம், இந்தியா : நிலையான மேம்பாட்டு இலக்குகளை உள்ளூர்மயமாக்குதல்
October 22 , 2023 1045 days 503 0
இந்த அறிக்கையானது, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை-வாழ்விட அமைப்பு ஆகியவற்றால் இணைந்து தயாரிக்கப் பட்டுள்ளது.
உலகளாவிய நிலைத்தன்மை நோக்கங்களுக்காக என்று தேசிய பணித் திட்டங்களை உருவாக்குவதற்கான முதல் விரிவான முன்னெடுப்பு இதுவாகும்.
பொலிவுரு நகரங்கள் திட்டத்தின் (SCM) கீழான 70%க்கும் அதிகமான திட்டங்கள் ஆனது நகரங்கள், சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம், தூய்மையான ஆற்றல் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான மேம்பாட்டு இலக்குகளுடன் (SDGs) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
பொலிவுரு நகரங்கள் திட்டமானது சுமார் 8,000 திட்டங்களை உள்ளடக்கியது.
பொலிவுரு நகர திட்டங்கள் ஆனது 17 நிலையான மேம்பாட்டு இலக்குகளில் 15 இலக்குகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் பங்களித்துள்ளன.
நிலையான மேம்பாட்டு இலக்குகளில் சுமார் 44% ஆனது 11வது - நகரங்கள் மற்றும் மனித குடியிருப்புகளை உள்ளார்ந்த, பாதுகாப்பான, நெகிழ்திறன் மிக்க மற்றும் நிலையானதாக மாற்றுதல் - நிலையான மேம்பாட்டு இலக்குடன் இணங்கியுள்ளன.
பொலிவுரு நகரங்கள் திட்டங்களில் சுமார் 3.3% திட்டங்கள் 6வது நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கு (தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம்) பங்களித்துள்ளது.
8.6% திட்டங்கள் 7வது நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கும் (மலிவு விலையிலான மற்றும் தூய்மையான ஆற்றல்) மற்றும் 6.4% திட்டங்கள் 8வது நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கும் (முறையான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி) பங்களித்து உள்ளன.