பொலிவுறு நகர திட்டததை செயல்படுத்த புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி டெவலப்மெண்ட் நிறுவனம் தொடக்கம் (SPV)
September 20 , 2017 2906 days 1141 0
புதுவையில் பொலிவுறு நகரத் திட்டத்தை செயல்படுத்த புதுச்சேரி அரசு “ஸ்மார்ட் சிட்டி டெவலப்மெண்ட் லிட்” (SPV) என்ற நிறுவனத்தை அமைத்துள்ளது.
நிறுவனச் சட்டம் 2013ன் கீழ் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் என்று பதியப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி அரசும் நகராட்சியும் 50:50 பங்குதாரர்களாக இருந்து செயல்படுத்துவார்கள்.
இது 16 உறுப்பினர் கொண்ட இயக்குனர் குழுவாக செயல்படும். இதன் தலைவராக தலைமைச் செயலாளர் மனோஞ் பரிதா செயல்படுவார். இக்குழுவின் இயக்குனர்களில் நிதித்துறை செயலாளர்; உள்ளுர் நிர்வாகத் துறை, சுற்றுலாத்துறை, தகவல் தொழில் நுட்பத்துறை மின்துறை செயலாளர்களும் அடக்கம். நிறுவனத்துக்கான தலைமைச் செயல் அதிகாரியும் நியமிக்கப்பட இருக்கிறார்.
பொலிவுறு நகரத் திட்டத்தை, தயார்செய்து செயல்படுத்துவதற்கான தொழிநுட்ப உதவி மற்றும் திறன் வளர்ச்சியை மேம்படுத்தவும் AFD என்ற பிரஞ்சு இருதரப்பு வளர்ச்சி நிறுவனம் அளிக்கவுள்ளது.