பொலிவுறு நகர விருதுகள் 2020
June 28 , 2021
1499 days
699
- பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டிற்கான பொலிவுறு நகர விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.
- 2020 ஆம் ஆண்டிற்கான இந்தியப் பொலிவுறு நகர விருதிற்கான பட்டியலில் உத்தரப் பிரதேச மாநிலமானது முன்னணியில் உள்ளது.
- மத்தியப் பிரதேசம் இரண்டாமிடத்திலும் தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் உள்ளன.
- 2020 ஆம் ஆண்டில் ஆற்றிய சிறப்பான செயல்திறனுக்காக சூரத் மற்றும் இந்தோர் ஆகியவை சிறந்த பொலிவுறு நகரங்களுக்கான விருதினைப் பெற்றுள்ளன.
- சண்டிகருக்கு சிறந்த ஒன்றியப் பிரதேச விருதானது வழங்கப் பட்டுள்ளது.
- இந்த விருதுகளானது மூன்று நகர மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கப்பட்டதன் ஆறாம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
- அவை,
- பொலிவுறு நகரங்கள் திட்டம்,
- நகர்ப்புற புத்துயிர்ப்பு மற்றும் மாற்றத்திற்கான அடல் திட்டம் (அம்ருத்) மற்றும்
- பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – நகர்ப்புறத் திட்டம் ஆகியவையாகும்

Post Views:
699