பொலிவுறு நகரங்களின் 3வது உச்சி மாநாடானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரப் பல்கலைக்கழக மாநாட்டு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
பொலிவுறு நகரங்கள் திட்டம் குறித்த உச்சி மாநாட்டை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்தது.
பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒதுக்கிய நிதியைச் செலவழிப்பதில் 100 பொலிவுறு நகரங்களிடையே அமராவதி நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஏழு கருப்பொருள்களின் கீழ் பொலிவுறு நகரங்களுக்கு ஏழு வெவ்வேறு விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.
விருது பெற்ற நகரங்கள் பின்வருமாறு:
நிலை - 1 நகரங்களில் இருந்து விசாகப்பட்டினம் மற்றும் அகமதாபாத்,
நிலை - 2 நகரங்களில் இருந்து வடோதரா, ராஞ்சி மற்றும் கான்பூர்,
நிலை - 3 நகரங்களில் இருந்து சாகர், அமராவதி மற்றும் ராஜ்கோட்