பொலிவுறு நகரங்களுக்கான தலைமை நிர்வாக அதிகாரிகளின் உச்சி மாநாடு
May 11 , 2018 2634 days 844 0
மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரத்தில் பொலிவுறு நகரங்களுக்கான தலைமை நிர்வாக அதிகாரிகளின் முதல் உச்சி மாநாடு நடத்தப்பட்டது.
இது மத்திய நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் நடத்தப்பட்டது. மேலும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சரால் (தனிப் பொறுப்பு) துவக்கி வைக்கப்பட்டது.
இந்த 2 நாள் மாநாடு பொலிவுறு நகரங்களுக்கான தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு மாற்றுத் துறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கான நடைமுறையை உருவாக்கிடவும், அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் நடத்தப்பட்டது.
2015-ஆம் ஆண்டு, ஜுன் மாதம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, பொலிவுறு நகரங்கள் திட்டம் மிகுந்த நிலைமாற்றத்தை கொண்டுவரும் நகர்ப்புறத் திட்டங்களில் முக்கியமான ஒன்றாகும்.