மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகமானது சிறப்பாக செயல்படும் 20 நகரங்களை குறைவான செயல்பாடு கொண்ட 20 நகரங்களுடன் இணைத்து, அவற்றை "சகோதரி நகரங்களாக" அறிவித்துள்ளன.
இவை பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் செயல்பட உள்ளன.
2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பொலிவுறு நகரத் திட்டமானது குடிமக்களுக்கு மேம்பட்ட வசதிகளை அளிக்கின்ற வகையில் ஒரு நகரத்தின் அனைத்து விதமான முன்னேற்றங்களையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் தர வரிசைப்படி, சிறந்த செயல்பாடு கொண்ட 20 நகரங்களில் அகமதாபாத் முதலிடத்தில் உள்ளது.