நிதி ஆயோக் மற்றும் இந்தியாவிலுள்ள உலகவளக் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து ‘போக்குவரத்தில் கரிம நீக்கத்திற்கான மன்றத்தினை’ இந்தியாவில் தொடங்கியுள்ளன.
இதில் இந்தியாவிற்கான அமலாக்கப் பங்குதாரர் நிதி ஆயோக் ஆகும்.
ஆசியாவில் பசுமை இல்ல வாயுக்களில் உச்ச நிலையை (போக்குவரத்துத் துறையில்) குறைப்பதே இதன் நோக்கமாகும்.
இந்த மன்றமானது NDC ஆசியாவிற்கான போக்குவரத்து முன்னெடுப்பு (NDC-TIA [Nationally Determined Contributions–Transport Initiative for Asia]) என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப் பட்டுள்ளது.
NDC-ஆசியாவிற்கான போக்குவரத்து முன்னெடுப்பு (TIA 2020-2023) என்பது சீனா, இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் போக்குவரத்துத் துறையில் கரிம நீக்கம் செய்வதற்கான ஒரு விரிவான அணுகுமுறையை ஊக்குவிப்பதற்கான ஏழு அமைப்புகளின் கூட்டுத் திட்டமாகும்.