போக்சோ வழக்குகளுக்காக 60 நாட்களில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நீதிமன்றங்கள் மத்திய அரசினால் நிதியளிக்கப் படவிருக்கின்றன.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (POCSO - Protection of Children from Sexual Offences) சட்டத்தின் கீழ் 100 வழக்குகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப் படுகின்றன.
இந்திய உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்த பொது நல வழக்கின் மீதான விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் ஏறத்தாழ 24,212 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் 911 வழக்குகள் மட்டுமே விசாரணை நீதிமன்றங்களினால் தீர்க்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப் படவிருக்கின்றன.