TNPSC Thervupettagam

போடோ ஒப்பந்தம்

January 29 , 2020 1983 days 854 0
  • போடோலாந்தின் தேசிய ஜனநாயக முன்னணியின் (National Democratic Front of Bodoland - NDFB) ஒன்பது பிரிவுகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்றில் இந்திய அரசு கையெழுத்திட்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தின் படி, போடோலாந்து பிராந்தியப் பகுதி மாவட்டமானது உள்ளூர் மக்களுக்கு சிறப்பு உரிமைகளைக் கொண்டிருக்கின்றது.
  • இருப்பினும், வெளிநபர்கள் இந்தப் பகுதியில் பணியாற்றுவதற்கு "அனுமதி" பெற வேண்டும்.
  • இந்த ஒப்பந்தமானது மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா, அசாம் மாநில முதல்வரான சர்பானந்தா சோனோவால் மற்றும் NDFBயின் தலைவர்கள் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தமானது இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் போடோலாந்து பிராந்திய ஆணையத்தை (BTC - Bodoland Territorial Council) உருவாக்க வழிவகை செய்துள்ளது.

போடோ பற்றி

  • போடோ என்பது அசாமில் உள்ள ஒரு மிகப்பெரிய பழங்குடியின சமூகமாகும். இது அம்மாநில மக்கள் தொகையில் 5 - 6 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
  • BTC ஆனது தற்பொழுது அசாமில் சிராங், கோக்ராஹர், பாஸ்கா மற்றும் உடல்குரி ஆகிய 4 மாவட்டங்களை நிர்வகிக்கின்றது.
  • இந்தப் பகுதிகள் போடோலாந்து பிராந்தியப் பகுதி மாவட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்