அஸ்ஸாமில் உள்ள போடோலேண்ட் பிராந்திய பகுதியின் (BTR) பட்டாம்பூச்சிகளை ஆவணப்படுத்தும் சிறு புத்தகத்தை அஸ்ஸாம் வனத்துறை வெளியிட்டது.
3,653 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட போடோலேண்ட் வனப்பகுதி, அஸ்ஸாமில் பதிவுசெய்யப்பட்ட 620 பட்டாம்பூச்சி இனங்களில், பல அரிய, ஓரிடத்திற்குரிய அல்லது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திற்கு மட்டுமே உரிய மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளான இனங்கள் உட்பட 346 பட்டாம்பூச்சி இனங்களுக்கு ஆதரவளிக்கிறது.
இப்பகுதி இந்தோ-மலேய, கிழக்கு இமயமலை மற்றும் இந்தோ-கங்கை உயிரியல் புவியியல் மண்டலங்களின் சந்திப்புப் புள்ளியில் அமைந்துள்ளதால், இது வடகிழக்கு இந்தியாவின் வளமான பட்டாம்பூச்சி வாழிடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
பட்டாம்பூச்சிகள் முக்கியமான மகரந்தச் சேர்க்கையாளர்களாகவும், சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் குறிகாட்டிகளாகவும், வனப் பல்லுயிர் மற்றும் உணவு வலைகளின் ஆதரவாளர்களாகவும் உள்ளன.
இந்தச் சிறு புத்தகம் போடோலேண்ட் பல்கலைக்கழகம், வடகிழக்கு பட்டாம்பூச்சி சந்திப்பு வலையமைப்பு மற்றும் பிற பிராந்திய பட்டாம்பூச்சி நிபுணர்களின் பல ஆண்டு கால அறிவியல் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.