போதை மருந்துகள் மற்றும் மனநோய் சார்ந்தப் பொருள்கள் சட்டத்திற்கான அதிகார வரம்பு இடமாற்றம்
June 27 , 2022 1276 days 717 0
1985 ஆம் ஆண்டின் போதை மருந்துகள் மற்றும் மனநோய் சார்ந்தப் பொருள்கள் (NDPS) சட்டம் மற்றும் 1988 ஆம் ஆண்டின் போதைப் பொருள் மற்றும் மனநோய் சார்ந்தப் பொருள்களை சட்டவிரோதமாக கடத்துதல் தடுப்புச் சட்டம் ஆகியவை தற்போது நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை (DoR) மூலம் நிர்வகிக்கப்படுகின்றன.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியமானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தற்போது மத்திய அரசு, போதைப்பொருள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் உள்துறை அமைச்சகத்தின் ஒரு துறையின் கீழ் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் விதிமுறைகளின் கீழ், போதைப்பொருள்க் கட்டுப்பாட்டு வாரியம் என்பது சட்டவிரோதமான போதைப்பொருள்களின் பயன்பாடு மற்றும் கடத்தலைத் தடுக்கும் பொறுப்பைக் கொண்டுள்ள ஒரு முக்கியச் சட்ட அமலாக்க மற்றும் உளவுத் துறை அமைப்பாகும்.