போதைப் பொருள் மருந்து முறைகேடு மற்றும் சட்ட விரோதக் கடத்தலுக்கான சர்வதேச எதிர்ப்பு தினம் – ஜுன் 26
June 27 , 2019 2267 days 881 0
இத்தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 26 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
இத்தினத்தின் அனுசரிப்பானது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைத் தீர்மானத்தினால் 1987 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
இத்தினம் 1989 ஆம் ஆண்டு முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
இத்தினம் போதைப் பொருள் மருந்து முறைகேடுகளற்ற சர்வதேசச் சமூகத்தை அமைக்கும் நோக்கத்தை அடைவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு இத்தினத்தின் கருத்துரு, “நீதிக்கான ஆரோக்கியம் : ஆரோக்கியத்திற்கான நீதி” என்பதாகும்.