போதைப்பொருட்களின் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் - ஜூன் 26
June 27 , 2023 916 days 331 0
1987 ஆம் ஆண்டு டிசம்பர் 07 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த நாளை அனுசரிப்பதற்கான முடிவினை மேற்கொண்டது.
போதைப் பொருட்களின் தவறானப் பயன்பாடு இல்லாதச் சமூகத்தினை உருவாக்குதல் என்ற இலக்கை அடைவதற்காக உலக நாடுகளின் முயற்சிகளை வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு:"மக்களுக்கு முதலிடம்: களங்கப் படுத்துவதையும் பாகுபாட்டையும் நிறுத்துங்கள், தடுப்பை வலுப்படுத்துங்கள்." என்பது ஆகும்.