போதைப்பொருள் இல்லா பாரதப் பிரச்சாரம் (நஷா முக்த் பாரத் அபியான்)
September 23 , 2026 39 days 214 0
100 வார கால நஷா முக்த் யுவ அபியான் பிரச்சாரமானது நாடு தழுவிய ராஷ்ட்ரிய சங்கல்ப் சமரோவுடன் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 அன்று தொடங்கியது.
இந்தப் பிரச்சாரம் "Nasha Mukt Yuva for Viksit Bharat Sankalp Abhiyan" என்று பெயரிடப்பட்டுள்ளதுடன் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 அன்று காணொளி வாயிலாக தொடங்கப்பட்டது.
இது இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் விவகாரத் துறையால் வழிநடத்தப்படுகிறது, மேலும் இது மேரா யுவ பாரத் (MY Bharat) மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தப் பிரச்சாரம் தடுத்தல், பாதுகாத்தல், மீட்டெடுத்தல் மற்றும் வழிநடத்துதல் ஆகிய நான்கு தூண்களில் கவனம் செலுத்துகிறது, இது 2026 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை 12 வார கால செயல்பாட்டு அட்டவணையைக் கொண்டுள்ளது.
பரந்த அளவிலான நஷா முக்த் பாரத் அபியான் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.