TNPSC Thervupettagam

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கவுஹாத்தி பிரகடனம்

July 13 , 2026 15 hrs 0 min 27 0
  • சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக வேண்டி, அசாமின் கவுஹாத்தியில் பிரிக்ஸ் நாடுகள் குவஹாத்தி பிரகடனத்தை ஏற்றுக் கொண்டன.
  • பிரிக்ஸ் போதைப்பொருள் தடுப்பு முகமைகளின் இரண்டு நாள் கூட்டத்தின் போது இந்த பிரகடனம் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளதுடன் இது நிகழ்நேர நுண்ணறிவுப் பகிர்வு, தகவல் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைந்த சட்ட அமலாக்க நடவடிக்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னல்கள் மற்றும் வளர்ந்து வரும் சவால்களை எதிர்த்துப் போராடுவதற்கு புதுமையான தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் கருவிகள் மற்றும் தரவு சார்ந்த அணுகுமுறைகளைப் பயன்படுத்த பிரிக்ஸ் நாடுகள் ஒப்புக் கொண்டன.
  • செயற்கை போதைப்பொருட்கள், புதிய மனோதத்துவ பொருட்கள், முன்னோடி இரசாயனங்களை மடைமாற்றுதல், மெய்நிகர் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் குற்றவியல் வலைப்பின்னல்களால் கடல்சார் வழிகள் மற்றும் டிஜிட்டல் தளங்களை சுரண்டுதல் ஆகியவை குறித்த கவலைகளை இந்தப் பிரகடனம் எடுத்துரைத்தது.
  • எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பல்களைச் சமாளிப்பதற்கு, வேகம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் பிரிக்ஸ் போதைப்பொருள் தடுப்புச் சட்ட அமலாக்க முகமைகளுக்கு இடையே தடையற்ற நுண்ணறிவுப் பகிர்வு ஆகியவற்றின் அடிப்படையிலான கூட்டாண்மைக்கு இந்தியா அழைப்பு விடுத்தது.
  • பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) அமைப்பானது எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்