TNPSC Thervupettagam

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பிம்ஸ்டெக் மாநாடு

February 15 , 2020 1970 days 693 0
  • புது தில்லியில் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பது தொடர்பான பிம்ஸ்டெக் நாடுகளின் மாநாட்டை இந்தியா முதன்முறையாக நடத்துகின்றது.
  • இந்த மாநாட்டை தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்துகின்றது.
  • போதைப்பொருள் கடத்தலால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதில் பங்காற்ற அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் ஒரு வாய்ப்பை வழங்குவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பற்றி:

  • இது 1986 ஆம் ஆண்டில் போதை மருந்து மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம், 1985இன் கீழ் அமைக்கப்பட்டது.
  • இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு ஒருங்கிணைப்பு நிறுவனம் ஆகும்.

பிம்ஸ்டெக் பற்றி:

  • பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) என்பது 1997 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பாகும்.
  • இதன் தலைமையகமானது வங்க தேசத்தின் டாக்காவில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்