போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் வருடாந்திர அறிக்கை 2024
September 22 , 2025 15 hrs 0 min 12 0
போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் (NCB) 2024 ஆம் ஆண்டு வருடாந்திர அறிக்கையின் படி, பஞ்சாப் அரசு 1,150 கிலோ ஹெராயினைக் கைப்பற்றியது.
நாட்டின் மக்கள் தொகையில் 2.3% மட்டுமே கொண்டுள்ள பஞ்சாபில் இந்தியாவின் ஹெராயின் பறிமுதல்களில் 44.5% பறிமுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் கைப்பற்றப்பட்ட மொத்த ஹெராயின் 2,596 கிலோ ஆகும்.
2024 ஆம் ஆண்டில் சுமார் 234 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு புது டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது.
2.94 கோடி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், போதைப் பொருள் மாத்திரைகள் பறிமுதல் செய்வதில் பஞ்சாப் முன்னிலை வகிக்கிறது.
51 லட்சம் போதைப்பொருள் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
2021 ஆம் ஆண்டில் மூன்று மருந்துப் பறிமுதல்களுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில், ஆளில்லா வாகனம் தொடர்பான 179 போதைப்பொருள் பறிமுதல் செய்யப் பட்டது.
பஞ்சாபில் 187 கிலோ ஹெராயின், 5.4 கிலோ மெத்தம்பேட்டமைன் மற்றும் 4.2 கிலோ ஓபியம் உள்ளிட்ட 163 மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
2024 ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக இந்தியாவில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டினரில் 203 பேர் கைது செய்யப்பட்டதுடன் நேபாள நாட்டினர் முதலிடத்தில் உள்ளனர்.
2024 ஆம் ஆண்டில் போதைப்பொருள் வழக்குகளில் 106 வெளிநாட்டினர் கைது செய்யப் பட்ட நிலையில் நைஜீரியா இரண்டாவது இடத்தில் உள்ளது.