TNPSC Thervupettagam

போதைப்பொருள் சோதனைகள் குறித்த உச்ச நீதிமன்ற விதிகள்

December 15 , 2025 2 days 40 0
  • அம்லேஷ் குமார் மற்றும் பீகார் மாநில அரசு இடையிலான (2025) வழக்கில் சுய விருப்பமின்றி மேற்கொள்ளும் போதைப் பொருள் சோதனைகளை அனுமதிக்கும் பாட்னா உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
  • போதைப்பொருள் சோதனைகளில், பாலிகிராஃப்கள் அல்லது மூளை/நினைவு ஆய்வு போன்று தகவல்களை வெளிக் கொணர்வதற்காக சோடியம் பென்டோத்தல் போன்ற மருந்துகளைப் பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவரை மயக்கமடையச் செய்வதை உள்ளடக்கியது.
  • கட்டாயப் போதைப் பொருள் சோதனைகளானது, தனி நபர்களை சுய குற்றச் சாட்டில் இருந்து பாதுகாக்கின்ற அரசியலமைப்பின் 20(3)வது சரத்தினை மீறுகின்றன.
  • ஒப்புதல் ஏதும் இல்லாமல் போதைப்பொருள் சோதனைகளை நடத்துவது 14 மற்றும் 19 ஆகிய சரத்துகளுடன் அரசியலமைப்பு "பொற்கோணத்தின்" ஒரு பகுதியாக அமைகின்ற 21வது சரத்து (வாழ்க்கை உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம்) மற்றும் தனியுரிமையை மீறுவதாகும்.
  • நீதிமன்றங்கள் போதைப் பொருள் சோதனை முடிவுகள் குற்றத்தை உறுதிப்படுத்த முடியாது என்றும், அது மற்ற ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளன.
  • ஒரு நீதிபதியின் முன்னதாக பதிவு செய்யப்பட்ட தகவலறிந்த ஒப்புதலுடன் மற்றும் மருத்துவ, சட்ட மற்றும் நடைமுறைப் பாதுகாப்புகளுடன், தானாக முன்வந்து மட்டுமே போதைப் பொருள் சோதனைகள் நடத்தப்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்