போதைப்பொருள் தேவை குறைப்புக்கான தேசிய செயல் திட்டம்
July 10 , 2026 76 days 181 0
போதைப்பொருள் பழக்கத்தைத் தடுக்கவும், மறுவாழ்வை ஊக்குவிக்கவும், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆனது போதைப்பொருள் தேவை குறைப்புக்கான தேசிய செயல் திட்டத்தை (NAPDDR) தொடங்கியுள்ளது.
இக்கட்டமைப்பு தடுத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திறன் மேம்பாடு, சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களை சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
2019 ஆம் ஆண்டு தேசிய அளவிலான கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் போதைப்பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மதிப்பிடப் பட்டுள்ளது.
அமைச்சகமானது தனது போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு வலையமைப்பை நாடு முழுவதும் 768 மையங்களாக விரிவுபடுத்தியுள்ளது.
போதை மீட்புக்கான கட்டணமில்லா உதவி எண் 14446 ஆதரவை வழங்கும் அதே வேளையில் நஷா முக்த் பாரத் அபியான் விழிப்புணர்வையும் போதைப்பொருள் இல்லாத இந்தியாவையும் ஊக்குவிக்கிறது.