போனலு என்பது தெலுங்கானாவில், குறிப்பாக ஐதராபாத் மற்றும் செகந்திராபாத்தில் கொண்டாடப்படும் ஓர் இந்து பண்டிகையாகும்.
தெலுங்கு மொழியில் "விருந்து" எனப் பொருள்படும்"போனலு" என்ற வார்த்தை ஆனது தெய்வத்திற்காக தயாரிக்கப்படும் சிறப்பு உணவைக் குறிக்கிறது.
இங்கு பக்தர்கள் மகாகாளி தேவிக்கு என்று அரிசி, வெல்லம், தயிர் மற்றும் வேப்பிலை ஆகியவற்றின் கலவையான போனம் என்ற உணவைப் படையலாக வழங்குகிறார்கள்.
ஆசீர்வாதம் மற்றும் நோய்கள் & பேரழிவுகளிலிருந்து பாதுகாப்பைப் பெறுவதற்காக இந்தப் பிரசாதம் வழங்கப்படுகிறது.
19 ஆம் நூற்றாண்டின் பிளேக் தொற்று உட்பட கடந்த கால துயர சம்பவங்களின் போது மக்களைப் பாதுகாத்ததற்காக அத்தெய்வத்திற்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது.