TNPSC Thervupettagam

போபால் நகரில் ரைண்டர்பெஸ்ட் காப்பு மையம்

June 21 , 2025 13 days 53 0
  • மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் தேசிய அளவில் அதிகப் பாதுகாப்பு நடவடிக்கை தேவைப்படும் விலங்கு நோய் ஆய்வு நிறுவனமானது (ICAR-NIHSAD) A வகை ரைண்டர்பெஸ்ட் வைரஸ் காப்பு மையமாக நியமிக்கப்பட்டுள்ளது.
  • விலங்கு சுகாதாரத்திற்கான உலக அமைப்பு (WOAH) மற்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆகியவற்றினால் இது நியமிக்கப்பட்டுள்ளது.
  • பாரிசில் நடைபெற்ற WOAH அமைப்பின் 92வது பொது அமர்வின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  • ரைண்டர்பெஸ்ட் ஆனது இதற்கு முன்னதாக 'கால்நடைகளின் மீதான பிளேக்' என்று அழைக்கப் பட்டது.
  • 2011 ஆம் ஆண்டில் உலகளவில் அழிக்கப் படுவதற்கு முன்பு இது ஓர் அழிவுகரமான கால்நடை நோயாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்