அறிவியல் தொழில்நுட்ப ரீதியாக விமானத் தரவுப் பதிவு அமைப்பு என்று அழைக்கப் படும் கருப்புப் பெட்டியானது, அந்தப் பேரழிவுக்கான காரணத்தைக் கண்டறிவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமானிகள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்கு இடையேயான பல தகவல் தொடர்புகள் உட்பட, விமானத்தின் வேகம், உயரம், இயந்திரச் செயல்திறன் மற்றும் விமானச் செயல்பாடுகள் கட்டுப்பாட்டு அமைப்பு சார்ந்த ஒலிப்பதிவு போன்ற முக்கியமானத் தகவல்களை இது கொண்டுள்ளது.
இந்தச் சிறப்புச் சாதனங்கள் அதிகளவிலான வெப்பநிலை, நீர் மற்றும் கடுமையான தாக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதால், மிகப் பேரழிவுகரமான சூழ்நிலைகளிலும் மிகவும் முக்கியத் தரவுகள் தக்க வைக்கப்படுவதை இவை உறுதி செய்கின்றன.
இடிபாடுகளுக்கு மத்தியில் அவற்றை மிகவும் எளிதாகக் கண்டுபிடிப்பதற்காக என்று கருப்புப் பெட்டிக்குப் பொதுவாக பிரகாசமான ஆரஞ்சு வண்ணம் பூசப் படுகிறது.