போராம்தேவ் வழித்தட மேம்பாட்டுத் திட்டம் ஆனது, சத்தீஸ்கர் மாநிலம் கபிர்தாம் மாவட்டத்தில் உள்ள போராம்தேவ் தாமில் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டம் மத்திய அரசின் சுதேச தரிசனத் திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் செயல் படுத்தப் படுகிறது.
இந்த திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவினம் 146 கோடி ரூபாயாகும்.
"சத்தீஸ்கரின் கஜுராஹோ" என்று அழைக்கப்படும் போராம்தேவ் கோயில், அதன் பண்டைய கல் கட்டிடக்கலை, நுணுக்கமான சிற்பங்கள் மற்றும் சமய முக்கியத்துவத்திற்குப் பெயர் பெற்றது.
இந்தத் திட்டம் புனித யாத்திரை உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், அணுகல் மற்றும் பார்வையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல் மற்றும் தளத்தின் கலாச்சார மற்றும் கட்டிடக்கலை மரபைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.