போரின் போது பாதிக்கப்பட்டோருக்கான இராணுவ நல நிதியம்
October 9 , 2019 2126 days 762 0
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகமானது போரின் போது பாதிக்கப்பட்ட முப்படையைச் சேர்ந்தவர்களின் உற்றோர் உறவினர்களுக்கான (NoK – Next of Kin) நிதித் தொகையை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தியுள்ளது.
இந்த நிதியானது போரின் போது பாதிக்கப்பட்டோருக்கான இராணுவ நல நிதியத்தின் (Army Battle Casualties Welfare Fund - ABCWF) கீழ் வழங்கப்பட இருக்கின்றது.
ABCWF ஆனது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் முன்னாள் படைவீரர் நலத் துறையின் கீழ் 2017 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
NoK மற்றும் போரில் பலியானோரின் குழந்தைகளின் நலனுக்காக தற்போதுள்ள பல்வேறு திட்டங்களுடன் இந்த நிதியுதவித் திட்டமும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.