போரும் அற்ற மற்றும் அமைதியும் அற்றச் சூழ்நிலை
February 9 , 2023
912 days
392
- இந்திய விமானப்படையானது (IAF), ஒரு திருத்தப்பட்ட கோட்பாட்டினை வெளியிட்டது.
- அதில் "போரும் அற்ற மற்றும் அமைதியும் அற்றச் சூழ்நிலையில்" விமானப் படையின் ஆற்றலின் பங்கை அது முன்வைத்தது.
- மற்ற இரு படைகளையும் உள்ளடக்கிய கூட்டு இராணுவ உத்திகளின் ஒரு பகுதியாக விமானப் படையின் ஆற்றலினைப் பயன்படுத்துவதை இந்தக் கோட்பாடு எடுத்து உரைக்கிறது.
- தற்காப்பு மற்றும் தாக்குதல் எதிர்ப்புச் செயல்பாடுகள் ஆகியவையும் இதில் இணைக்கப் பட்டுள்ளன என்பதையும் இந்தக் கோட்பாடு வலியுறுத்தியது.
- இந்திய விமானப் படையானது முதன்முதலில் 1995 ஆம் ஆண்டில் ஒரு கோட்பாட்டினை வெளியிட்ட நிலையில் இது 2007 ஆம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்டது.
- 2012 ஆம் ஆண்டில், திருத்தப்பட்ட மற்றும் வகைப்படுத்தப்படாத ஓர் அடிப்படைக் கோட்பாடு வெளியிடப்பட்டது.
- சமீபத்தியக் கோட்பாடானது 2012 ஆம் ஆண்டு ஆவணத்தைத் திருத்தியமைக்கிறது.

Post Views:
392