போரோபீன் அடிப்படையிலான பசுமை மசகு எண்ணெய் தொழில்நுட்பம்
July 27 , 2026 48 days 159 0
குவஹாத்தியில் உள்ள மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தின் (IASST) ஆராய்ச்சியாளர்கள் ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்தி போரோபீன் அடிப்படையிலான பசுமை மசகு எண்ணெய் சேர்க்கையை உருவாக்கி உள்ளனர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமான IASST, போரோபீனை அதிக செயல்திறன் கொண்ட மசகு எண்ணெய் சேர்க்கையாக முதல் முறையாகப் பயன்படுத்துவதை நிரூபித்துள்ளது.
போரோபீன் என்பது அதிக இயந்திர வலிமை மற்றும் மின் கடத்துத்திறன் கொண்ட போரான் அணுக்களால் முழுமையாக உருவாக்கப்பட்ட இரு பரிமாண (2D) நானோ பொருளாகும்.
ஆமணக்கு எண்ணெயில் 0.1 எடை சதவீதம் (wt%) போரோபீனைச் சேர்ப்பதன் மூலம், தூய ஆமணக்கு எண்ணெயுடன் ஒப்பிடுகையில் உராய்வு சுமார் 42% குறைக்கப் படுகிறது.
இந்தத் தொழில்நுட்பம் இயந்திரத் திறனை மேம்படுத்துகிறது, ஆற்றல் இழப்பு மற்றும் தேய்மானத்தைக் குறைக்கிறது, மேலும் நிலையான பசுமை மசகு பயன்பாடுகளை ஆதரிக்கிறது.