போர்களின் காரணமாக ஆதரவற்று விடப்படும் குழந்தைகளுக்கான உலக தினம் - ஜனவரி 06
January 7 , 2023 998 days 379 0
போர்களின் காரணமாக ஆதரவற்று விடப்படும் குழந்தைகளின் நிலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அவர்களின் அவலநிலையைப் பற்றிய தகவல்களைப் பரப்புவதையும், அந்தக் குழந்தைகள் வளரும்போது அவர்கள் எதிர் கொள்ளும் உளவியல், சமூக மற்றும் உடல் ரீதியான தடைகள் குறித்து வலியுறுத்திக் கூறுவதையும் நோக்கமாகக் கொண்டு இத்தினமானது கொண்டாடப் படுகிறது.
இந்த உலகலாவியத் தினமானது பிரான்சு நாட்டில் உள்ள SOS என்ஃபான்ட்ஸ் என் டிட்ரேசெஸ் என்ற அமைப்பினால் நிறுவப்பட்டது.
போர்களின் காரணமாக ஆதரவற்று விடப்படும் குழந்தைகளின் அவலநிலையை நிவர்த்தி செய்வதற்கான ஒரு வாய்ப்பினை இந்த தினம் சமூகங்களுக்கு வழங்குகிறது.
2001 ஆம் ஆண்டு முதல், போர்களின் காரணமாக ஆதரவற்று விடப்படும் குழந்தைகளின் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையானது தொடர்ந்து குறைந்து வருகிறது, ஆனால் அது ஆண்டிற்கு 0.7 சதவீதம் என்ற விகிதத்தில் மட்டுமே குறைந்து வருகிறது.