போர்ச்சுகலில் அரிய திரள் மேகம்
- வெப்ப அலையின் போது போர்ச்சுகலில் உள்ள ஒரு கடற்கரையில் ஓர் அரிய சுருள் மேகம் தோன்றியது.
- இந்த குழாய் வடிவ மேகம் ஆனது ஒரு பெரிய அலை போல கிடைமட்டமாக உருண்டு வருவது போல் தோன்றியது.
- இது ஒரு தாழ் நிலையிலான, கிடைமட்டமான மற்றும் ஒப்பீட்டளவில் அரிதான ஆர்கஸ் வகை மேகமாகும்.
- குளிர்ந்த காற்று கடற்கரைக்கு அருகில் சூடான, ஈரப்பதமான காற்றைச் சந்திக்கும் போது திரள் மேகங்கள் உருவாகின்றன.
- அவற்றுடன் திடீர் காற்று, ஒரு சிறிய கடல் கொந்தளிப்பு அல்லது மாறும் வானிலைச் சூழல்களும் தோன்றலாம்.
- இந்தத் சுருள் மேகங்கள் எந்த இயற்கைப் பேரழிவு அல்லது சுனாமி அபாயத்தையும் குறிக்கவில்லை.

Post Views:
52