போர்த்தளவாட/ஆயுதத் தொழிற்சாலைகள் தினம் - மார்ச் 18
March 21 , 2025 154 days 106 0
1801 ஆம் ஆண்டில் கொல்கத்தாவிற்கு மிக அருகில், காலனித்துவ இந்தியாவில் முதல் போர்த்தளவாட தொழிற்சாலை நிறுவப்பட்டதை இந்த நாள் நினைவு கூர்கிறது.
கொல்கத்தாவின் கோசிபூரில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப் பழமையான போர்த் தளவாடங்கள் தொழிற்சாலையானது 1802 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதியன்று தொடங்கப் பட்டது.
1787 ஆம் ஆண்டு, இஷாபூரில் நிறுவப்பட்ட ஒரு துப்பாக்கித் தொழிற்சாலை 1791 ஆம் ஆண்டு முதல் அதன் உற்பத்தியைத் தொடங்கியது.
1842 ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் சிறிய வகை பீரங்கித் தொழிற் சாலை அமைக்கப்பட்டது.
1904 ஆம் ஆண்டு, இஷாபூரில் சிறு ஆயுதத் தொழிற்சாலை நிறுவப்பட்டது.