இந்திய அரசு 2019 ஆம் ஆண்டின் போலியோ சொட்டு மருந்து முகாமை மார்ச் 9 ஆம் தேதியன்று தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், 5 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.
தேசிய அளவில் 2 போலியோ தடுப்பு இயக்கங்கள், மாநில அளவில் 2 அல்லது 3 போலியோ தடுப்பு இயக்கங்கள் ஆகியவற்றை நடத்துவதன் மூலம் போலியோ நோயிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இது நடத்தப்படுகிறது.
2019 ஆம் ஆண்டின் போலியோ சொட்டு மருந்து முகாமின் நோக்கமானது நாட்டில் போலியோ ஒழிப்பை நீடித்திருக்கச் செய்தலாகும்.
போலியோ
போலியோ என்று அழைக்கப்படும் போலியோ மெய்லிட்டிஸ் நோயானது மிகவும் அதிக அளவில் தொற்றக்கூடிய ஒரு வைரஸ் நோயாகும்.
குழந்தைகளில் மற்றவர்களை விட 5 வயதிற்குக் கீழுள்ள நபர்களுக்கு இந்த வைரஸ் நோய்த் தொற்று அபாயம் அதிக அளவில் இருக்கக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
மனிதக் கழிவுகள் கலந்துள்ள நீர் மற்றும் உணவுகளின் மூலம் இந்த போலியோ வைரஸ் பரவுகிறது. ஆனால் பாதிக்கப்பட்டோரின் உமிழ்நீரிலிருந்து போலியோ வைரஸ் குறைந்த அளவில் பரவுகின்றது.
இந்தியா போலியோ இல்லாத நாடாக 2014 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் போலியோ நோயானது கடைசியாக 2011 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி மேற்கு வங்காளம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டது.