இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கூட்டு இராணுவப் பயிற்சியின் 12-வது பதிப்பான “போல்டு குருஷேத்திரா 2019” ஆனது உத்தரப் பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள பாபினா இராணுவ முகாமில் தொடங்கியது.
மூன்று நாட்கள் நடத்தப்படும் இந்தப் பயிற்சியானது இராணுவத் தொழில்நுட்பம், கடல்சார் பாதுகாப்பு அதிகரிப்பு மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராகப் போரிடுதலை வலுப் பெறச் செய்தல் ஆகியவற்றை மேம்படுத்தும்.
2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளானது இந்திய இராணுவம் மற்றும் சிங்கப்பூர் ஆயுதப் படைகளிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக ஒரு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.