காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையமானது (Khadi and Village Industries Commission – KVIC) எல்லைப் பாதுகாப்புப் படையுடன் (Border Security Force – BSF)இணைந்து போல்டு (BOLD – Bamboo Oasis on Lands in Drought) எனப்படும் வறண்ட நிலங்களில் மூங்கில் சோலையை அமைத்தல் என்ற ஒரு திட்டத்தினைத் தொடங்கி உள்ளது.
ராஜஸ்தானிலுள்ள இந்தியப் பாலைவனத்தில் பசுமைப் பரவலை அதிகரிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் KVIC மற்றும் BSF ஆகியவை இணைந்து 1000 மூங்கில் கன்றுகளை நட்டுள்ளன.
இந்த மரக்கன்றுகள் ஜெய்சால்மீரின் தனோத் கிராமத்தில் நடப்பட்டுள்ளன.