TNPSC Thervupettagam

போஷன் அபியான் திட்டம் குறித்த 4வது முன்னேற்ற அறிக்கை

September 10 , 2022 974 days 458 0
  • 'இந்தியாவில் ஊட்டச்சத்து முன்னேற்றத்தைப் பாதுகாத்தல்: தொற்றுநோய்க் காலங்களில் போஷன் அபியான் திட்டம்' என்ற தலைப்பில் நிதி ஆயோக் ஓர் அறிக்கையினை வெளியிடப்பட்டது.
  • 17 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் மட்டுமே 12-23 மாத வயதுடைய குழந்தைகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழு நோய்த் தடுப்பு மருந்து பெற்று உள்ளனர்.
  • அதே சமயம் 11 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் 25 சதவீதத்திற்கும் குறைவாகவே அது உள்ளது என்று இந்த அறிக்கை கூறியுள்ளது.
  • மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மகாராஷ்டிரா அனைத்து மாநிலங்களிலும் முதல் இடத்தைப் பெற்றது.
  • இதில் ஆந்திரப் பிரதேசம் இரண்டாவது இடத்தையும், குஜராத் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
  • இதில் தமிழ்நாடு 4வது இடத்தினைப் பெற்றது.
  • கோவிட் பெருந்தொற்று காலத்தில் போஷன் அபியான் திட்டத்தினை செயல் படுத்துவதற்குத் தேவையான மனித வளங்களை 100 சதவீதம் முழுமையாக ஆட் சேர்ப்பு செய்த மாநிலங்களில் ஆந்திரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
  • அங்கன்வாடி பணியாளர்களுக்கு அலைபேசி வழங்குதலிலும் ஆந்திரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
  • சமூக சுகாதார மையங்களிலும், குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சேவைகள் மற்றும் துணை செவிலியர் மருத்துவச்சிகள் ஆட்சேர்ப்பு ஆகியவற்றிலும் ஆந்திரப் பிரதேச மாநிலம் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்