இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரான எம். வெங்கையா நாயுடு "பாரதிய போஷான் கீதம்" என்ற கீதம் ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளார். இது "2022 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத நாடாக உருவாக்குதல்" என்ற செய்தியை நாட்டின் அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கீதமானது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தினால் கருத்தாக்கம் செய்யப்பட்டது. இது பிரசூன் ஜோஷி என்ற பாடலாசிரியரால் எழுதப்பட்டு, சங்கர் மகாதேவன் என்பவரால் பாடப்பட்டது.
“போஷான் அபியான் அல்லது தேசிய ஊட்டச்சத்துத் திட்டமானது” 2018 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
விரிவான தேசிய ஊட்டச்சத்து ஆய்வு 2016-18ன் படி, ஐந்து வயதுக்கு உட்பட்ட இந்தியக் குழந்தைகளில் 34.7 சதவீதம் குழந்தைகள் வளர்ச்சி குன்றியிருக்கின்றார்கள்.