சைபீரியப் பகுதியில் காணப்படும் நிரந்தர உறைபனியில் தோல், ரோமம் மற்றும் உறுப்புகள் உட்பட நன்கு பாதுகாக்கப்பட்ட 44,000 ஆண்டுகள் பழமையான ஓநாய் ஒன்றை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மாதிரியானது, ப்ளீஸ்டோசீன் சகாப்தத்தின் பிற்பகுதியைச் சேர்ந்தது.
நிரந்தர உறைபனியானது, ஓநாய் உடலை பனியில் மூழ்கச் செய்து ஆக்ஸிஜன் மற்றும் ஈரப்பதத்தில் அது வெளிப்படுவதைக் குறைத்ததன் மூலம் அதன் உடலின் சிதைவைத் தடுத்தது.