TNPSC Thervupettagam

ப்ளூ ஃப்ளாக் (நீலக்கொடி) சான்றிதழ்

September 24 , 2021 1415 days 880 0
  • இந்தியாவில் மேலும் 2 கடற்கரைகளுக்கு ப்ளூ ஃப்ளாக் (Blue Flag) சான்றிதழானது வழங்கப் பட்டுள்ளது.
  • இந்த இரண்டு கடற்கரைகள் இந்தப் பட்டியலில் இணைந்ததன் மூலம் இந்தியாவில் இந்தச் சான்றிதழைப் பெற்றக் கடற்கரைகளின் மொத்த எண்ணிக்கை  10 ஆக உயர்ந்தது.
  • ப்ளூ ஃப்ளாக் சான்றிதழானது ஒரு சர்வதேசச் சுற்றுச்சூழல் தரநிலைக் குறியீடு ஆகும்.
  • இந்த ஆண்டில் இந்தச் சான்றிதழைப் பெற்ற இரு கடற்கரைகள் தமிழ்நாட்டிலுள்ள கோவலம் மற்றும் புதுச்சேரியின் ஏடென் கடற்கரை ஆகியனவாகும்.
  • டென்மார்க் நாட்டிலுள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பினால் இந்தச் சான்றிதழானது வழங்கப்படுகிறது.
  • மற்ற எட்டுக் கடற்கரைகளுக்கு 2020 ஆம் ஆண்டு ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் வழங்கப் பட்டது.
  • இந்தச் சான்றிதழைப் பெற்ற கடற்கரைகள் உலகில் தூய்மையான கடற்கரைகளாகக் கருதப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்