புது டெல்லியில் உள்ள இராஷ்டிரபதி பவனில் உள்ள அம்ரித் உத்யானில் அமைக்கப் பட்டுள்ள ப்ளூமேரியா தோட்டம், ஆலமரத் தோப்பு மற்றும் துள்ளி ஓடும் ஓடை ஆகியவற்றைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைத்தார்.
இந்தப் புதிய தோட்டங்கள் ஆனது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டிருக்கும்.
ப்ளூமேரியா தோட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட செடிகள் மற்றும் புல் படுக்கைகளைக் கொண்டுள்ளது.
ஆலமரத் தோப்பில் பாத அழுத்தச் சிகிச்சை நடைபாதைகள், பஞ்சத்வ பாதைகள் மற்றும் காடுகளை ஒத்த ஒலிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
துள்ளி ஓடும் ஓடைகளில் சிற்ப வேலைபாடுகள் கொண்ட நீர்க் குழாய்கள், படிக் கட்டுகள் மற்றும் ஒரு பிரதிபலிப்பு குளம் ஆகியவற்றை கொண்டுள்ளது.