மகதாய் நீர்த் தகராறுகள் தீர்ப்பாயத்தின் பதவிக் காலம் ஆனது 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமைக்கப்பட்ட இந்தத் தீர்ப்பாயம், கோவா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா இடையேயான நீர்ப் பகிர்வுத் தகராறுகளை தீர்க்கிறது.
இந்தியாவில் செயலில் உள்ள நான்கு நீர்த் தகராறு தீர்ப்பாயங்களில் மூன்றாவது மிக நீண்ட பதவிக் காலத்தைக் கொண்டதாக இது உள்ளது.
அதன் 2018 ஆம் ஆண்டு முடிவில் மூன்று மாநிலங்கள் ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து, அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக் கெடுவை நீட்டிக்கத் தீர்ப்பாயம் கோரியதைத் தொடர்ந்து இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.