மகப்பேறின் போது பிறப்புறுப்பில் ஏற்படும் காயத்தினைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் - மே 23
May 25 , 2024 422 days 244 0
இது தாய் மற்றும் புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை நன்கு மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளைப் போலவே வளர்ந்து வரும் நாடுகளில் மகப்பேறின் போது பிறப்புறுப்பில் ஏற்படும் காயத்தினை அரிதான ஒன்றாக மாற்றும் நோக்கத்துடன் அனுசரிக்கப் படுகிறது.
மகப்பேறின் போது பிறப்புறுப்பில் ஏற்படும் காயம் என்பது பிரசவத்தின் போது ஏற்படக் கூடிய மிகவும் தீவிரமான மற்றும் மோசமான காயங்களில் ஒன்றாகும்.
இது சரியான நேரத்தில், உயர்தர மருத்துவச் சிகிச்சையை அணுகாமல் நீண்ட நேரம் நீடித்த, தடைப்பட்ட பிரசவத்தினால் பிறப்புப் பாதை மற்றும் சிறுநீர்ப்பை அல்லது மலக்குடல் ஆகியவற்றுக்கு இடையே ஏற்படுகிற ஒரு துளை ஆகும்.
ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியில், ஆசியா, அரபு பிராந்தியம் மற்றும் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் சுமார் 2 மில்லியன் பெண்கள் இந்தக் காயத்துடன் வாழ்கின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் உலகளவில் 50,000 முதல் 100,000 புதிய பாதிப்புகள் உருவாகின்றன.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Breaking the Cycle: Preventing Fistula Worldwide" என்பதாகும்.