மகப்பேறின் போது பிறப்புறுப்பில் ஏற்படும் காயத்தினைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் - மே 23
May 26 , 2023 858 days 308 0
இந்த நாள் மகப்பேறின் போது பிறப்புறுப்பில் ஏற்படும் காயம் போன்ற பல்வேறுப் பிரச்சனைகளைத் தடுப்பது மற்றும் அதற்குச் சிகிச்சை செய்வது பற்றி ஒரு விழிப்பு உணர்வைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2003 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியமானது, ‘மகப்பேறின் போது பிறப்புறுப்பில் ஏற்படும் காயத்தினைத் தடுப்பதற்கான ஒரு பிரச்சாரத்தை’ தொடங்கியது.
ஐக்கிய நாடுகள் சபையானது இந்தத் தினத்தினை 2013 ஆம் ஆண்டில் கொண்டாடத் தொடங்கியது.
குறைந்த வருமானம் உள்ள பகுதிகளில் உள்ள பெண்களை பெருமளவில் பாதிக்கிற வகையில் மகப்பேறின் போது பிறப்புறுப்பில் ஏற்படும் ஒரு காயம் என்பது குழந்தை பிறப்பின் போது உண்டாகும் காயம் ஆகும்.